உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிதி நிறுவன மோசடி; புகாரளிக்க அழைப்பு

நிதி நிறுவன மோசடி; புகாரளிக்க அழைப்பு

கோவை; கோவை, பெண்கள் பாலி டெக்னிக் அருகில், 'சன்மேக்ஸ்' நிதி நிறுவனம் செயல்பட்டது. இதில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை தராமல் மோசடி செய்தது தொடர்பாக, அந்நிறுவன முதன்மை செயல் அலுவலர் சிவராமகிருஷ்ணன், கீதாஞ்சலி ஆகியோர் மீது, கடந்தாண்டு மே, 27ல் வழக்கு பதியப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் திரும்ப கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள், மாநகர போலீஸ் கமிஷனர் வளாகத்தில் உள்ள, கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு, ஒரிஜினல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என, போலீசார் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி