உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன்; விவசாயிகளுக்கு அழைப்பு

ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன்; விவசாயிகளுக்கு அழைப்பு

சூலூர்:செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில், விவசாயிகளுக்கு, 3 லட்சம் ரூபாய் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது, என, மேற்பார்வையாளர் கூறினார்.செஞ்சேரி மலையடிபாளையம் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தமிழரசன் கூறியதாவது: செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை, மக்காச்சோளம், கொண்டக்கடலை உள்ளிட்ட விளைபொருட்களுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. மேற்கண்ட விளை பொருட்களை விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம்.ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 3 லட்சம் ரூபாய் அல்லது இருப்பு வைக்கும் பொருட்களின் மதிப்பில், 50 சதவீதம் வரை கடனாக வழங்கப்படும். ஆண்டுக்கு, 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். ஒரு பயனாளி, 120 நாட்கள் வரை பொருட்களை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கலாம். கடந்த மாதத்தில், 7.20 லட்சம் ரூபாய் பொருளீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.பொருளீட்டு கடன் பெற விரும்பும் சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள், செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி