உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுஇடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்!

பொதுஇடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்!

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், பொதுஇடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, வீடுதோறும் தூய்மை பணியாளர்கள் குப்பையை சேகரித்து வருகின்றனர். மேலும், பொதுஇடத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, முக்கிய இடங்களில் ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.சிலர் இதை கவனிக்காமல், ரோட்டோரங்களிலும், பஸ் ஸ்டாப், பள்ளி, அரசு அலுவலகம் அருகே, குப்பையை வீசி செல்கின்றனர். இதனால் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.மழை காலத்தில் குப்பை கொட்டப்பட்ட இடத்தில், சேறும் சகதியாக இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.இதைத் தவிர்க்க, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொது இடத்தில் கொட்டப்பட்ட குப்பையை அவ்வப்போது அகற்றம் செய்து வருகின்றனர். ஆனால், மீண்டும் குப்பை கொட்டப்படுவதால், ஊராட்சி நிர்வாகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை சரி செய்ய முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இனி வரும் காலங்களில், தடை விதிக்கப்பட்ட இடங்களில் குப்பை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி