வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நிறைய இளைஞர்கள் பைக் சாகசம், சைலன்சர் கழற்றி அதிக சத்தத்துடன் ஓட்டுகின்றனர். இவர்களை பிடித்து அபராதம் போடுங்கள். வாகனம் சீஸ் செய்யவும். விபத்துக்கள் குறையும்.
கோவையில் எல்லா சாலைகளிலும் வாகனங்கள் மிக அதிவேகத்தில்தான் செல்கின்றனர் . தலைக்கவசம் கிடையாது, செல்போன் பேசிக்கொண்டே செல்வது ஒரே வாகனத்தில் நான்கு பேர் செல்வது என்பது தினமும் காணும் காட்சி, மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சர்வ சாதாரணமாக அதிவேகத்தில் செல்கின்றனர். காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற செயல்கள் மட்டுப்படும். கண்காணிப்பு கேமரா இருந்தும் பயனில்லை . அதை எல்லாம் யாரும் ஒரு பொருட்டாகவே எடுக்க வில்லை. கோவை காவல் துறை கமிஷனர் இதில் உடனடியாக தலையிட்டு விபத்துகளை குறைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .
சாலை விபத்துகளில் முதன்மை வகிப்பது தமிழ் நாடு. இதற்கு மோசமான சாலைகளும் மதுவும்தான். ஆனால் மதுவிலக்கு பற்றி சிறிதும் சிந்திக்காமல் , மது அருந்துவோரை மட்டும் அறிவுரை சொல்வதும், பண வசூல் செய்வதும் மக்களை ஏமாற்றும் செயல்.