மேலும் செய்திகள்
வானவெடியால் தீ விபத்து
21-Oct-2025
கோவை: கோவை, உடையாம்பாளையத்தில் உள்ள பழைய இரும்பு கடையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். கணபதி, கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனங்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டன. மூன்று மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானதால், அப்பகுதி புகை மூட்டமாக மாறியது. அருகில் இருந்த கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
21-Oct-2025