உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காஸ் பங்க்கில் தீ விபத்து; ஆம்னி வேன் எரிந்து சேதம்

காஸ் பங்க்கில் தீ விபத்து; ஆம்னி வேன் எரிந்து சேதம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே காஸ் பங்க்கில் நடந்த தீ விபத்தில் ஆம்னி வேன் எரிந்து சேதமானது. கவுண்டம்பாளையம் தேமையன் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 52; டிரைவர். மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதியில் இருந்து கவுண்டம்பாளையம் நோக்கி ஆம்னி வேனில் வந்து கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி பிரிவு அருகே உள்ள எல்.பி.ஜி., பங்க்கில் காஸ் நிரப்பினார். வாகனத்தை ஸ்டார்ட் செய்த போது எதிர்பாராத விதமாக தீ பற்றியது. சம்பவ இடத்துக்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆம்னி வேன் முழுவதும் எரிந்து நாசமானது. உயிர் சேதம் இல்லை. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், மேட்டுப்பாளையம் ரோடு, வீரபாண்டி பிரிவில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை