உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து;  சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு 

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து;  சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு 

கோவை; சிங்காநல்லுார், நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கராஜ்; கோவை விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நீலிக்கோணாம்பாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று, மாணிக்கராஜ் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றார். மதியம், வீட்டின் இரண்டாம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால், தீ வீடு முழுவதும் பரவியது.கரும்புகை வெளியேறியது.தகவல் அறிந்த பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் தலைமையில், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 வீரர்கள் விரைந்து, தீயை அணைத்தனர்.இதனிடையில், வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்தது.இதில் வீட்டின் கண்ணாடி, வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கான காரணம் குறித்து, சிங்காநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை