உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தீ விபத்தில் எரிந்து பொருட்கள் சேதம்

 தீ விபத்தில் எரிந்து பொருட்கள் சேதம்

அன்னுார்: வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அன்னுார் - சத்தி சாலையில், யோவான் சந்து பகுதியில் வசிக்கும் மணி, 70, நேற்று அதிகாலை பணிக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், புகை வெளியேறி, பிரிஜ் வெடித்து, தீ பரவியது. வீட்டில் இருந்த தொலைக்காட்சி, பிரிஜ், கட்டில், பீரோ, துணிகள் என, பொருட்கள் கருகின. அன்னுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டின் மேற்கூரை, ஓடுகள் என அனைத்தும் சேதமடைந்தன. வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் குமரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, அரிசி, பருப்பு, வேட்டி, சேலை வழங்கினர். இழப்பீடு கிடைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். பேரூராட்சி சார்பில் தலைவர் பரமேஸ்வரன், பாதிக்கப்பட்ட மணிக்கு நிதி உதவி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி