உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீட்பு நடவடிக்கைக்கு தீயணைப்புத்துறை தயார்

மீட்பு நடவடிக்கைக்கு தீயணைப்புத்துறை தயார்

பொள்ளாச்சி, ;தீபாவளி நாளில், தீ விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தீயணைப்புத்துறை வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி கூறியதாவது:பொள்ளாச்சி நகரில், பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத்துறை சார்பில் தடையின்மை சான்று வழங்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கும் போது, தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பள்ளி மாணவர்கள், சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.தீபாவளி நாளில் தீ விபத்து ஏற்பட்டால் மீட்புப் பணிகளில் ஈடுபட வசதியாக தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும்.தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவர். தங்கள் பகுதியில் நடக்கும் தீ விபத்துகள் குறித்து பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு உடனே தகவல் அளிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி