உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது

தொண்டாமுத்தூர்: பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., முரளி தலைமையிலான போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீத்திபாளையம், அய்யாசாமி கோவில் அருகே உள்ள முள் காட்டில், பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறுமுககவுண்டனூரை சேர்ந்த வேலுச்சாமி, 52, அய்யாசாமி, 47, அய்யப்பன், 44, நாராயணசாமி, 59, கரடிமடையை சேர்ந்த பழனிசாமி,38 ஆகிய ஐந்து பேரையும், கைது செய்தனர். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து, சீட்டு கட்டுகள் மற்றும் 26,540 ரூபாயை, பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி