உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வடமாநிலத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சா கடத்தல்

வடமாநிலத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சா கடத்தல்

கோவை வடமாநிலத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை, மதுவிலக்கு போலீசாருக்கு கோவை ரயில்வே ஸ்டேஷனில், கஞ்சா மூட்டையுடன் வாலிபர் நிற்பதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., உதயராஜ் தலைமையில், போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.அப்போது அங்கு வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் நடத்திய சோதனையில், கஞ்சா இருப்பது தெரிந்தது. அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுஜித் டிஜில், 25 எனத் தெரிந்தது. விற்பனைக்காக, ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து மொபைல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி