உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அந்தோணியார் ஆலய கொடியேற்றம்; வரும் 15ல் தேர்பவனி திருவிழா

அந்தோணியார் ஆலய கொடியேற்றம்; வரும் 15ல் தேர்பவனி திருவிழா

கோவை; புலியகுளம் அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றத்திருவிழா விமரிசையாக நடந்தது.கோவை புலியகுளத்தில், மிகவும் பழமையான அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்பவனி கொடியேற்றம் நேற்றுமுன் தினம் நடந்தது.நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. தொடர்ந்து, ஆலய- கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது அப்போது திரண்டிருந்த பக்தர்கள் மலர் தூவி கொடியை வரவேற்றனர். பின்னர், கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் ஆலய கொடியேற்றினார். இதில் ஆலய பங்குதந்தை அருண் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

சிறப்பு திருப்பலி

இதனை தொடர்ந்து, நேற்று காலை 11:00 மற்றும் மாலை 6:00 மணிக்கு வாலிபாளையம் பங்குதந்தை ஆன்டனிபெலிக்ஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது.நாளை மற்றும் மறுநாள் நல்லாயன் குருமடத்தை சேர்ந்த பேராசிரியர் லாரன்ஸ் அடிகள் தலைமையிலும், 13ம் தேதி கோவை தூய மைக்கேல் அதிதூதர் ஆலய பங்குதந்தை ஸ்டீபன் ஆரோக்கியராஜ், தலைமையில் திருப்பலி நடக்கிறது.14-ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஒத்தக்கால்மண்டபம் பங்கு தந்தை ஜாய் ஜெயசீலன் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடை பெறும்.

தேர்பவனி

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆலய தேர்பவனி வரும் 15-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8:00 மணிக்கு முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல், ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது.இதற்கு கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் மாலை 6:00 மணிக்கு, காட்டூர் பங்குதந்தை ததேயூஸ் அமல் தாஸ் தலைமையில், திருப்பலி நடக்கிறது. திருப்பலி முடிந்ததும் தேர்பவனி நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கின்றனர். பின்னர் அன்று இரவு 10:00 மணிக்கு, நற்கருணை ஆசீர் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை