உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கொடி கம்பங்களால் சாலையோரங்கள் சேதம்

 கொடி கம்பங்களால் சாலையோரங்கள் சேதம்

சூலூர்: துளையிடும் இயந்திரத்தை கொண்டு, அவிநாசி ரோட்டை துளையிட்டு தி.மு.க., கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் மேற்கு மண்டல தி.மு.க., மகளிரணி மாநாடு இன்று நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்கும் கோவை வரும் முதல்வர், துணை முதல்வரை வரவேற்க சூலூர் அடுத்த நீலம்பூர் பகுதியில் இருந்து பல கி.மீ., தூரத்துக்கு தி.மு.க., கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதற்காக, டிரில்லிங் இயந்திரத்தை கொண்டு அவிநாசி ரோட்டின் இரு புறங்களில் துளைகள் போடப்பட்டு கொடியுடன் கூடிய இரும்பு பைப்புகள் நடப்பட்டுள்ளது புகாருக்கு உள்ளாகியுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'இயந்திரத்தின் மூலம் ரோட்டில் துளையிட்டு இரும்பு கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால், ரோடு சேதமடைந்துள்ளது. ஐந்து அடிக்கு ஒரு கம்பம் என, ஆயிரக்கணக்கான கம்பங்கள் நடப்பட்டுள்ளன. பலமான காற்று வீசினால் கம்பம் சாய்ந்து ரோட்டில் செல்வோரின் மீது விழும் அபாயம் உள்ளது. வாகனங்களை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தக்கூட வழியில்லை. சாதாரண பொதுமக்கள் ரோட்டை சேதப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், ரோட்டை சேதப்படுத்தி கொடி நடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ