உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறக்கும் வாகன ஓட்டிகளே, கூடாது வேகம்!: கண்காணிக்கின்றன கேமராக்கள்

பறக்கும் வாகன ஓட்டிகளே, கூடாது வேகம்!: கண்காணிக்கின்றன கேமராக்கள்

கோவை: சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து கட்டுப்படுத்த, மாநகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கென பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, வேகமாக செல்லும் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது.சமீப காலமாக கோவை மாநகர பகுதிகளில் செல்லும், வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளது. கல்லுாரி செல்லும் மாணவர்கள் பலர், கட்டுப்பாடு இல்லாமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் பல இளைஞர்கள் தங்களின் உயிரை இழக்கின்றனர். கை, கால் ஊனமடைகின்றனர்.அதிவேகமாக வாகனத்தை இயக்குபவரால் அவர் மட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் பிறருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதை கண்காணிக்க, கோவை மாநகரில் குனியமுத்துார் ரோடு, அவிநாசி ரோடு ஹோப்ஸ் அருகில் மற்றும் சரவணம்பட்டி ஆகிய இடங்களில், வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க, கேமரா பொருத்தப்பட்டுள்ளது.அந்த கேமராக்கள், வேகத்தை கண்காணித்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை படம் பிடிக்கும். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர்.சரவணம்பட்டி, ஹோப் காலேஜ் மற்றும் குனியமுத்துார் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கடந்த ஒரு ஆண்டில், 9101 வாகனங்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை கிழக்கு போக்குவரத்து பகுதியில் 336 வழக்குகளும், மேற்கு போக்குவரத்து பகுதியில் 8765 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு முறை வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள், மீண்டும் வழக்கில் சிக்கினால் வாகனங்களை, பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தி விபத்துகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 60 கிமீ.,க்கும் அதிகமாக செல்லும் வாகனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. போலீசார் இல்லாத பகுதிகள் மற்றும் கல்லுாரிகள் இருக்கும் பகுதிகளில், 'ஸ்பீடு டிடெக்டர்' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார் தணிக்கையின் போது பயன்படுத்தும் 'ஸ்பீடு கன்' செயல்பாடுகளை, நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கவுள்ளோம்' என்றார்.கோவை கிழக்கு போக்குவரத்து பகுதியில் 336 வழக்குகளும், மேற்கு போக்குவரத்து பகுதியில் 8765 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு முறை வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள், மீண்டும் வழக்கில் சிக்கினால் வாகனங்களை, பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜன 27, 2025 07:00

செம காமெடி. ட்ராஃபிக்கைப் பாத்தா எறும்பு ஊறுகிற மாதிரி இருக்கு. இதுல பறக்குறது எப்பிடி?


Kundalakesi
ஜன 26, 2025 06:57

கண் துடைப்பு தான். அவிநாசி சாலையில் பந்தயம் போல தான் வாகனங்களை இயக்கு kindranar


நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 06:48

KL ரெஜிஸ்டெரெட் வாகனம் என்றால் எப்படி நடவடிக்கை எடுப்பீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை