தியேட்டர் கேன்டீனிலும் உணவு பாதுகாப்பு முக்கியம்
கோவை; போத்தனுாரில் உள்ள அரசன் தியேட்டர் கேன்டீனில், இரு நாட்களுக்கு முன் விற்பனை செய்த சிப்ஸ் பழைய எண்ணெயில் தயாரித்தது போன்ற வாசம் இருந்ததால், வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தியேட்டரில் ஆய்வு மேற்கொண்டு, உணவு மாதிரிகளை சேகரித்தனர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, ''ஆய்வின் போது காலாவதியான பொருட்கள் ஏதும் இல்லை. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் வைத்து இருந்தனர். சரியான இடத்தில் வைக்கப்படவில்லை. பரிசோதனைக்கு பின் சிப்ஸ் மாதிரி சேகரித்து அனுப்பப்பட்டுள்ளது. உரிய விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களிலும், முக்கிய படங்கள் திரையிடும் போதும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். தியேட்டர்களில் உள்ள உணவகங்கள், கேன்டீன்கள் கட்டாயம் உணவு பாதுகாப்பு மற்றும் தர விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.