மேலும் செய்திகள்
கிடப்பில் போடப்பட்டுள்ளமழை நீர் வடிகால் பணி
28-Mar-2025
கோவை; இன்னும் ஒரு மாதத்துக்கு, கோவை மாநகராட்சியின், 56வது வார்டு வாக்காளர்களே நம்மூர் வி.ஐ.பி.,கள். ஏனெனில், அடுத்த மாதம் அந்த வார்டுக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. அதற்கான ஏற்பாடுகளை, மாநகராட்சி நிர்வாகம் முனைப்போடு செய்து வருகிறது.ஒண்டிப்புதுார் மேம்பாலத்துக்கு அருகே அமைந்திருக்கிறது இந்த வார்டு; 16 ஆயிரம் வாக்காளர்கள் வசிக்கின்றனர். குறுக்கு வீதிகள் அதிகமாக காணப்படுகின்றன. இடைத்தேர்தல் வரப்போகிறது என்பதால், மாநகராட்சியில் இருந்து அவசர அவசரமாக நிதி ஒதுக்கப்பட்டு, வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன. சூர்யா நகரில் மழை நீர் வடிகால் கட்டுவதற்கு இப்போது தான் குழி தோண்டிக் கொண்டிருக்கின்றனர். குழாய் பதித்த இடங்களில் 'வெட்மிக்ஸ்' கொட்டி, 'பேட்ச் ஒர்க்' செய்கின்றனர். புது இட்டேரி வீதியில் குறுக்கே கான்கிரீட் பாலம் கட்டப்படுகிறது. மழை நீர் வடிகால் துார்வாரும் பணியும் துவக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு, ஓட்டுக் கேட்க வருவதற்கு முன், வார்டுக்குள் ஏதேனும் வேலைகள் செய்திருக்க வேண்டும் என்பதற்காக, ஆங்காங்கே மாநகராட்சியால் சில பணிகள் செய்யப்படுகின்றன. ஓராண்டாக மோசமாக இருந்த ரோடு இப்போது தான் செப்பனிடப்படுகின்றன.சட்டசபை கூட்டத்தொடர் இம்மாதம், 30ம் தேதி வரை நடக்கிறது. மே துவங்கியதும் வார்டு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும். அதன்பின், ஓட்டு கேட்டு அரசியல் கட்சியினர் வீதி வீதியாக வருவர். ஆளுங்கட்சியான தி.மு.க.,வினர், வீடு வீடாக வருவார்கள். அதனால், இன்னும் ஒரு மாதத்துக்கு, 56வது வார்டு மக்களே நம்மூரின் வி.ஐ.பி.,கள்!
வார்டுக்குள் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என பார்க்க, ஒரு 'ரவுண்டு' சுற்றி வந்தோம். பிரச்னைகளை அப்பகுதியில் வசிப்போர் அடுக்கினர். l எங்கள் பகுதிக்கு, 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. l அனைத்து வீதிகளிலும் ரோடு படுமோசமாக இருக்கிறது. l பாதாள சாக்கடை குழாய்க்காக ஒரு முறை தோண்டினார்கள்; குடிநீர் குழாய்க்காக ஒரு முறை தோண்டினார்கள். l ரோட்டை குதறிப் போட்டு வைத்திருக்கிறார்கள். சில வீதிகளில் மட்டும் குழாய் பதித்த இடத்தில் மட்டும் கான்கிரீட் கலவை ஊற்றியுள்ளனர். குறுக்கு வீதிகளில் தார் ரோடு இன்னும் போடவில்லை. மழை இல்லாததால் பாதிப்பு இப்போது தெரிவதில்லை. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகி விடுகிறது. நடந்து கூட செல்ல முடியாது. வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுகின்றனர்.l சூரியா நகர் ரயில்வே கேட்டுக்கு, ஒரு புறத்தில் மழை நீர் வடிகால் இருக்கிறது; மற்றொரு புறத்தில் வடிகால் இல்லை. வடிகால் கட்டியுள்ள இடத்திலும் துார்வாராததால் மண் மேவியிருக்கிறது. மழை பெய்தால் தண்ணீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. l சூர்யா நகர் ரயில்வே கேட்டை கடக்க, அ.தி.மு.க., ஆட்சியில் மேம்பாலம் கட்டுவதற்கு, 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி விட்டனர். அதனால், ரயில் கடக்கும்போது, கேட் போடப்படுகிறது. ரோட்டின் இருபுறமும் வாகனங்கள், 15 நிமிடங்கள் வரை காத்திருக்கின்றன. நாளொன்றுக்கு, 20க்கும் மேற்பட்ட தடவை கேட் மூடப்படுகிறது; மாற்றுப்பாதை இல்லை. கேட் திறந்ததும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. l பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். சூர்யா நகர், கண்ணன் நகர், சிவலிங்கபுரம் பகுதியில், நான்காயிரம் குடும்பங்கள் வசிக்கின்றனர். மிகவும் கஷ்டப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.l பாதாள சாக்கடை சேம்பர் கட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட குழாயை மாதக்கணக்கில் அடுக்கி வைத்திருக்கின்றனர். l பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. தெருவிளக்குகள் குறைவாக இருப்பதால், இரவில் இவ்வீதிகளில் செல்வதற்கு அச்சமாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
28-Mar-2025