உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணிகளை விரைந்து முடிக்க முன்னாள் கலெக்டர் உத்தரவு

பணிகளை விரைந்து முடிக்க முன்னாள் கலெக்டர் உத்தரவு

கோவை; மாநகராட்சி பகுதிகளில் புதிதாக ரோடு அமைத்தல், 24 மணி நேர குடிநீர் திட்டம் உள்ளிட்ட வேலைகள் நடக்கின்றன. மத்திய மண்டலம், ராமநாதபுரம் ரோடு முதல் செட்டிபாளையம் ரோடு வரை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட வேலை நடக்கிறது. வேலை முடிந்த இடங்களில் நெடுஞ்சாலை துறை சீரமைப்பு செய்வதை, மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார் நேற்று ஆய்வு செய்தார். ராமநாதபுரம், பாரதி நகர் ஆறாவது வீதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். 70வது வார்டு சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் டயாலிஸிஸ் மையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட அவர், விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். துணை கமிஷனர் குமரேசன், தலைமை பொறியாளர் விஜயகுமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை