உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூலி தொழிலாளியை தாக்கிய நால்வர் கைது

கூலி தொழிலாளியை தாக்கிய நால்வர் கைது

போத்தனூர்; கோவை, குனியமுத்தூர் அடுத்து பி.கே.புதூர், அண்ணா நகரை சேர்ந்தவர் குமரேசன், 36; கூலித் தொழிலாளி. இவர் வேலை முடிந்த பின், இடையர்பாளையம், பகவதியம்மன் காலனியிலுள்ள பாலன் மளிகை கடை அருகே, உட்காருவது வழக்கம். அப்போது அப்பகுதியை சேர்ந்த குணசேகரனின் மனைவி கடைக்கு வருவார். அவரை குமரேசன் கேலி, கிண்டல் செய்ததாக, கடந்த, 17ல் நான்கு பேருடன் வந்த குணசேகரன், இரும்பு ராடால் தாக்கினார். உடன் வந்த நால்வரும் சவுக்கு பூட்டு, பெல்ட் ஆகியவற்றால் தாக்கினர். தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். அங்கிருந்தோர் குமரேசனை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது புகாரில் குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, குணசேகரன், சசீந்திரன், 27, சக்தி வசந்த், 24, சூர்யா, 30 ஆகியோரை கைது செய்தனர். பிரசாந்த் என்பவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ