உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கஞ்சா கடத்தல் நான்கு பேர் கைது

 கஞ்சா கடத்தல் நான்கு பேர் கைது

கோவை: சரவணம்பட்டி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்னவேடம்பட்டி சத்தி நகர் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில், நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. சோதனையில் அவர் கஞ்சா கடத்தியது தெரிந்தது. அவர் நல்லாம்பாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம், 24 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. * போத்தனூர் போலீசார் நடத்திய சோதனையில், வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பின்புறம் கஞ்சா விற்ற வெரைட்டி ஹால் ரோடு சி.எம்.சி., காலனியை சேர்ந்த சேகர், 24 என்பவரை கைது செய்தனர். * தொண்டாமுத்தூர் ரோடு சிறுவாணி ரோடு சந்திப்பு அருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தெலுங்குபாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார், 23, சவுரிபாளையம் மசக்காளி பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜசேகரன், 31 ஆகியோரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.500 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை