வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காரமடை அண்ட் மேட்டுப்பாளையம் பைபாஸ் முக்கியம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகர் பகுதியில், உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், சர்வே பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து, நகர் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்க இரு மாதங்களில் பணி துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் நகரில், கோவை, ஊட்டி, அன்னுார், சிறுமுகை உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சாலையை விரிவாக்கம் செய்ய கடந்த செப்டம்பர் மாதம் நெடுஞ்சாலை துறையினர் சர்வே எடுத்தனர். சர்வே முடிவில் ஒரு மணி நேரத்திற்கு, இச்சாலையில் 47,500 வாகனங்கள் செல்கின்றன என கண்டறியப்பட்டது. இதையடுத்து மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் சி.டி.சி., டிப்போ முதல் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தீம் பார்க் வரை சுமார் 10 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்னும் இரு மாதங்களில் துவங்கும். ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டன. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே ஐந்து முக்கு பகுதியில் ரவுண்டான அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
காரமடை அண்ட் மேட்டுப்பாளையம் பைபாஸ் முக்கியம்