உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி

மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி

கோவை : நாமக்கல்லை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன், 27. இவர் கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் நாமக்கல்லில் எனது குடும்பத்துடன், வசித்து வருகிறேன். எனக்கு பால் பேட்மிட்டன் விளையாட்டு மூலம் 2018ம் ஆண்டு, கோவையை சேர்ந்த பரத்குமார் என்பவர் அறிமுகமானார். அவர் என்னிடம், தான் விமானப்படை கேன்டீனில் பணிபுரிந்து வருவதாகவும், மத்திய அரசு அதிகாரிகள் பலரை தனக்கு தெரியும் என்றார். மேலும் அவர்கள் மூலம் எனக்கு தெற்கு ரயில்வேயில், கேட் கீப்பர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் கூறினார். அதனை நம்பி நான், பல்வேறு தவணைகளாக ரூ.5.50 லட்சம் கொடுத்தேன். அவர் எந்த வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இவருடன், 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தாங்களும் அந்த நபரால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ