உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மெட்வின் மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம்

மெட்வின் மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம்

கோவை:திருச்சி ரோட்டில் உள்ள மெட்வின் மருத்துவமனையின் 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாளை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.முகாமில், இந்தியாவின் சிறந்த எலும்பியல் மருத்துவர்களில் ஒருவரான அஜய் சின்ஹ் தேவ்தா பங்கேற்கிறார். இத்துடன் பி.எம்.டி., பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகின்றன.அஜய் சின்ஹ் தேவ்தா பல நோயாளிகளுக்கு, சி.ஆர்., முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளார். சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலி குறைவாக இருக்கும். குறைந்த நேர நடைபயிற்சி மற்றும் படிக்கட்டுகளில் ஏறும் பயிற்சி மட்டுமே செய்தால் போதும்.இந்நிகழ்ச்சியில், மெட்வின் மருத்துவமனையின் தலைவர் வெங்கடாசலம், பிரகாஷ் சர்க்கரை நோய் நிபுணர் தனுஷ்யா சவும்யா, ஆகியோரும் பங்கேற்கின்றனர். முன்பதிவிற்கு, 98422 64177 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !