செல்லப்பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்
கோவை: உலக கால்நடை மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.கோவை, டவுன்ஹால் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் வரும், 26ம் தேதி, உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி, இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்பட்டாலும் நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முக்கியம் என்பதால், பொதுமக்கள் தங்களின் செல்லப்பிராணிகளுக்கு இம்முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். காலை, 8:00 மணி முதல் தடுப்பூசி போடப்படும் என, அரசு கால்நடை பன்முக மருத்துவமனை டாக்டர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.