உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளி பயன்பாட்டிற்கு ரூ.50 லட்சத்தில் இலவச வாகனம்

மாற்றுத்திறனாளி பயன்பாட்டிற்கு ரூ.50 லட்சத்தில் இலவச வாகனம்

கோவை: எல்.ஐ.சி., பொன் விழா அறக்கட்டளை சார்பில், 'ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ்' தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு, ரூ.50 லட்சம் மதிப்புள்ள வாகனம், இலவசமாக வழங்கப்பட்டது. ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் நிறுவனம், கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஆதரவற்ற முதியோர், நோயுற்றவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு, சேவை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு, சுமார் 30 பேர் பயணிக்கக்கூடிய ஒரு வாகனம், முதியோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டோர் பயணிக்கும் வகையில், சக்கர நாற்காலியுடன் ஒரு வாகனத்தையும், 49.92 லட்சம் ரூபாய் செலவில், எல்.ஐ.சி.,நிறுவனம் வழங்கியது. கோவை கோட்ட அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், எல்.ஐ.சி., அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ