மேலும் செய்திகள்
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அரசு ஐ.டி.ஐ.,
15-Oct-2025
பெ.நா.பாளையம்: கோவையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) நடப்பு ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய தொழில் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையமான ஐ.டி.ஐ.,யில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில் பிரிவான, 'ஸ்மார்ட் போன் டெக்னீசியன் கம் ஆப் டெஸ்டர்' பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இதற்கான பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும், இலவச லேப்டாப், சைக்கிள், பஸ் பாஸ், அரசால் இலவசமாக வழங்கப்படும். மாதந்தோறும், 750 ரூபாய் வீதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர கல்வி தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு உணவு வசதியுடன், தங்கும் விடுதி வசதி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும். வயது வரம்பு, 14 முதல், 40 வயது வரை. பெண்களுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை. இத்தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் வாயிலாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு, 88254 34331 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
15-Oct-2025