உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கதை எழுதுவது முதல் டைரக்ஷன் வரை... இனி ஏ.ஐ.,பார்த்துக்கொள்ளும்!

கதை எழுதுவது முதல் டைரக்ஷன் வரை... இனி ஏ.ஐ.,பார்த்துக்கொள்ளும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சி னிமா உலகம் எப்போதும், புதுமைகளை வரவேற்கும் ஒரு மந்திர உலகம். அந்த வரிசையில், இப்போது கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை, ஒட்டுமொத்த திரையுலகையும் புரட்டிப் போட, இரண்டு புதிய ஏ.ஐ.,(செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பங்கள் தயாராகி வருகின்றன. ஒரு படத்திற்கு முக்கியமானது கதை. அந்த கதையை, இனி ஏ.ஐ., எழுதப்போகிறது. ஜெனரேட்டிவ் ஏ.ஐ., என்ற தொழில்நுட்பம் இதை சாத்தியமாக்குகிறது. நீங்கள் ஒரு வரியில், ஒரு கருவை சொன்னால் போதும்; அதை பற்றிக்கொண்டு ஒரு முழு திரைக்கதையையே, இந்த ஏ.ஐ., உருவாக்கிவிடும். கற்பனையும்... தொழில்நுட்பமும் அடுத்தது, ஏஜென்டிக் ஏ.ஐ., இது ஜெனரேட்டிவ் ஏ.ஐ.,யின் அடுத்த கட்டம். சொன்னதை மட்டும் செய்யும் கருவியாக இல்லாமல், சுயமாக சிந்தித்து ஒரு உதவி இயக்குனர் போலவே செயல்படும் திறன் கொண்டது. சுருக்கமாக சொன்னால், இனிவரும் காலங்களில் ஒரு படத்தின் டைட்டிலில் கதை, திரைக்கதை, இயக்கம் என்பதோடு, 'ஏ.ஐ., மேற்பார்வை' என்ற, ஒரு புதிய பெயரையும் நாம் பார்க்கலாம். மனித கற்பனையும், ஏ.ஐ., தொழில்நுட்பமும் இணையும்போது, திரையில் நாம் காணப்போவது இதுவரை கண்டிராத, புதிய மாயாஜாலமாக இருக்கும் என்பதில், சந்தேகமில்லை என்கின்றனர் தொழில்நுட்ப வல்லூனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

சந்திரசேகர்
அக் 05, 2025 10:34

AI தொழில் நுட்பம் வளர்வதால் மனித மூளைக்கு வரும் காலத்தில் அவ்வளவு வேலை இருக்காது. இதனால் மனித ஆற்றல் குறைந்து மனிதர்கள் வேலை வாய்ப்பை இழந்து அவதி படுவார்கள். மீண்டும் குடும்பங்களில் ஏழ்மை நிலை வரும். மனிதனை கொல்ல புதிய ஆயுதங்கள் உருவாகி அதை AI வைத்து செயல்படுத்துவார்கள். இன்று நாம் எப்படி இன்டர்நெட் மற்றும் செல்போன் கம்ப்யூட்டர் இல்லாமல் வாழ முடியாதோ அதை போல AI இல்லாமல் வாழ முடியாத காலம் வரும். அன்று மனித மூளை பயன் அற்றதாகி விடும். பிறகு AI இந்த உலகத்தை தனதாக்கி கொண்டு மனிதனை அடிமையாக்கி வாழும். பின் வரும் காலத்தில் ரோபோக்கள் AI யின் அடியாளாக இருக்கும். விஞ்ஞானம் ஒரு கட்டுபாட்டுக்குள் இருந்தால் மனிதன் வாழலாம். ஆனால் அதை நாம் மீறி விட்டால் அது நம்மை ஆளும்


Jagan babu Vasudevan
அக் 05, 2025 06:59

இது அவ்வளவு எளிதல்ல.. நாம் கூறும் கருவை வைத்து சில பாயிண்டுகளை மட்டுமே AI கொடுக்கும்.. AI-யும் ஏற்கனவே இருக்கும் கதைகளையும் திரைவிமர்சனங்களையும் ஆராய்ந்து தான் புதிய கதையை கொடுக்கும். அதுவும் 20 முதல் 50 வரிகள் வரை தான் இருக்கும்.. நாம் எதிர்பார்க்கும் தன்மை அதில் இருக்குமா என்பது சந்தேகமே. s://tamil.pratilipi.com/user/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-ss977y08g8


bharathi
அக் 05, 2025 05:03

But distribution management only with


முக்கிய வீடியோ