உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோட்டக்கலை பண்ணையில் பழ நாற்றுகள் விற்பனை

தோட்டக்கலை பண்ணையில் பழ நாற்றுகள் விற்பனை

சூலூர்; தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ்,சூலூர் வட்டாரம், கண்ணம்பாளையத்தில் அரசு தோட்டக்கலைப்பண்ணை செயல்படுகிறது. இங்கு குறைந்த விலையில் காய்கறி விதைகளான, தக்காளி, கத்திரி,கீரை, சுரைக்காய், பீர்க்கன், வெண்டை விற்பனை செய்யப்படுகின்றன. பழ நாற்றுகளான சீதா, நாவல், எலுமிச்சை, பப்பாளி, கருவேப்பிலை, முருங்கை, மற்றும் அலங்கார செடிகள் மூலிகை செடிகள், மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நேரடியாக விற்பனை செய்யப் படுகிறது. இதேபோல், மண்புழு உரம், டிரைக்கோ டெர்மா விரிடி உள்ளிட்ட உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இதனை பெற்று விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறலாம், என, சூலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விபரங்களுக்கு, தோட்டக்கலை அலுவலரை, 97913 87404 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ