உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுமக்களுக்கு மானிய விலையில் பழச்செடிகள்

பொதுமக்களுக்கு மானிய விலையில் பழச்செடிகள்

சூலுார்; சுல்தான்பேட்டை வட்டாரத்தில், மானிய விலையில் பொதுமக்களுக்கு, பழச்செடிகள் தொகுப்பு வழங்கப்படுகிறது.சுல்தான்பேட்டை வட்டாரத்தில், ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ், பச்சாபாளையம் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட, 18 அரசு துறைகள் ஒருங்கிணைந்து, இக்கிராமத்தில் வேளாண் பணிகளை மேற்கொள்ள உள்ளன.முதல்கட்டமாக, தோட்டக்கலைத்துறை சார்பில், பொதுமக்கள், 200 பேருக்கு, மானிய விலையில் பழச்செடிகள் தொகுப்பு வழங்கும் பணி துவங்கியுள்ளது. சப்போட்டா, கொய்யா, பப்பாளி, சீதா, மர நெல்லி உள்ளிட்ட, ஐந்து பழச்செடிகள் அடங்கிய தொகுப்பின் மொத்த விலை, 200 ரூபாய். இதில், 75 சதவீதம் மானியம் போக, 50 ரூபாய் செலுத்தி, மக்கள் பழச்செடிகள் தொகுப்பை பெற்று சென்றனர்.பொதுமக்களுக்கு, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் தியாகு, பொதுமக்களுக்கு தொகுப்பினை வழங்கினார். ஆதார் அட்டை நகல், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கொடுத்து, தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். 200 பேருக்கு பழச்செடிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என, அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை