உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முழு மானியத்தில் முருங்கை நாற்றுகள்

முழு மானியத்தில் முருங்கை நாற்றுகள்

சூலுார்; தோட்டக்கலைத்துறை சார்பில், முழு மானியத்தில் முருங்கை நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. சூலுார் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், பிரதம மந்திரியின் ராஷ்ட்ரிய கிரிஷி யோஜனா திட்டத்தின் கீழ், பிகேஎம் 1 ரக செடி முருங்கை நாற்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் சூலுார் வட்டார விவசாயிகள், தங்களின் சிட்டா, அடங்கல், புல வரைபடம், ரேஷன், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், சூலுார் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, 0422 2990014 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி