மேலும் செய்திகள்
கந்த சஷ்டி விழா நவ., 2ல் துவக்கம்
29-Oct-2024
உடுமலை,; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா, வரும், 2ம் தேதி துவங்கி, 8ம் தேதி வரை நடக்கிறது.2ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து யாக சாலை பூஜை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தினமும், காலை, மாலை நேரங்களில், யாக சாலை பூஜைகள், நடக்கிறது.வரும், 7ம் தேதி, மதியம், 3:15 மணிக்கு, சுவாமி புறப்பாடும், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
29-Oct-2024