உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 4 ஆயிரம் வீடுகளுக்கு குப்பை கூடைகள்

4 ஆயிரம் வீடுகளுக்கு குப்பை கூடைகள்

கருமத்தம்பட்டி; மோப்பிரிபாளையம் பேரூராட்சியில், 4 ஆயிரம் வீடுகளுக்கு குப்பை கூடைகள் வழங்கும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. மோப்பிரிபாளையம் பேரூராட்சி வார்டுகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 10 வது வார்டு பகுதியில், மக்கும் குப்பை, மக்காத குப்பையை மக்கள் தனித்தனியாக பிரித்து வழங்கிட, எல்.எம்.டபில்யூ, நிறுவனத்தின் சமுதாய பங்களிப்பு நிதியில் இருந்து, குப்பை கூடைகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் சசிக்குமார், 10வது வார்டு உறுப்பினர் பூபதி ஆகியோர் வீடு, வீடாக சென்று குப்பை கூடைகளை வழங்கினர். பேரூராட்சியில், 4 ஆயிரம் வீடுகளுக்கு, தலா இரு குப்பை கூடைகள் வழங்கி, பொது மக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி