உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பைகளுக்கு தீ; புகையால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பைகளுக்கு தீ; புகையால் வாகன ஓட்டிகள் அவதி

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே அண்ணா நகர் பகுதியில் சாலையோர குப்பைகளுக்கு தீ வைத்ததால், புகை பரவி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காரமடை அருகே அண்ணா நகர் பகுதியில் சாலையோரம், குப்பைகளை மக்கள் கொட்டி வருகின்றனர். இதில் பெரும்பாலும் இறைச்சி கழிவுகள், பழம் மற்றும் காய்கறி கழிவுகள் உள்ளன. இந்த குப்பைகள் தேங்கி, அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு மழை மற்றும் காற்று வீசும் நேரத்தில் குப்பைகள் பறந்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனிடையே அந்த குப்பை குவியல்களுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். தீ பரவி குப்பைகள் எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. சாலையில் செல்லும் வாகனங்கள் புகைக்குள் புகுந்து சென்றதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. மேலும் வாகன ஓடிகளுக்கும் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கும் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளும் ஏற்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ