உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நீரோடை அருகே குப்பை; பொதுசுகாதாரம் பாதிப்பு

 நீரோடை அருகே குப்பை; பொதுசுகாதாரம் பாதிப்பு

நெகமம்: கிணத்துக்கடவு மற்றும் சிறுகளந்தையில் நீர்த்தேக்க பகுதியில் குப்பை கொட்டப்பட்டுள்ளதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிணத்துக்கடவு மயானம் வழியாக, கோதவாடி மற்றும் நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டின் வளைவு பகுதியில், நீர் தேக்க பகுதி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், இங்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிலர், நீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவு கொட்டி செல்கின்றனர். இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன், பொதுச்சுகாதாரம் பாதித்து, அருகிலுள்ள விளை நிலமும் பாதிக்கப்படுகிறது. இதே போன்று, நெகமம் அருகே உள்ள சிறுகளந்தையில் நீரோடை பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. அங்கு குப்பையுடன் மழை நீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில் நீரோடையும் உள்ளது. இதிலும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், வாட்டர் கேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தண்ணீரில் மிதந்தபடி உள்ளது. மேலும், நீரோடையும், குப்பை கொட்டும் இடமும் பக்கமாக இருப்பதால் தண்ணீர் மாசுபட அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை கொட்டும் இடத்தை மாற்றம் செய்ய வேண்டும் என, சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ