உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேஸ்புக் நண்பனை பார்க்க வந்த ஜெர்மனி இளைஞர்

பேஸ்புக் நண்பனை பார்க்க வந்த ஜெர்மனி இளைஞர்

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே எல்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலஸ்ருதி. இவரது மகன் தயாஸ்ரீ. கலைச்செல்வனுக்கு பேஸ்புக் வாயிலாக ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஐனீஸ் என்ற இளைஞர் அறிமுகமானார். பொறியாளரான ஐனீஸ், கலைச்செல்வன் உடன் பேஸ்புக்கில் மிகவும் நட்புடன் பழகி வந்தார்.இதனிடையே இந்த பழக்கத்தை அடிப்படையாக கொண்டு ஜெர்மனி இளைஞர், கலைச்செல்வனை காண கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு நேற்று முன் தினம் இரவு வந்தார். அதன் பின் கலைச்செல்வன் வீட்டிற்கு சென்ற அவர், கலைச்செல்வனின் குடும்பத்தினருடன் புகைப்படங்களை எடுத்தும், அங்கு உணவு அருந்தியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் கலைச்செல்வன் வீட்டிற்கு வந்து ஜெர்மனி நாட்டு இளைஞரை ஆச்சரியமாக பார்த்து சென்றனர். பின், ஐனீஸை மேட்டுப்பாளையத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு பஸ் வாயிலாக கலைச்செல்வன் அனுப்பி வைத்தார்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ