உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரதத்தில் கீதை சொல்லும் கீதா நாட்டியம் நிகழ்ச்சி

பரதத்தில் கீதை சொல்லும் கீதா நாட்டியம் நிகழ்ச்சி

கோவை; போர்க்களத்தில் கலங்கி நின்ற அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசித்த கீதையை பரதநாட்டிய வடிவில் உருவாக்கியிருக்கிறார், கோவை ராம் நகரைச் சேர்ந்த பவித்ரா.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:பரத நாட்டியத்தில் கீதையை சொல்லும் முயற்சிதான் கீதா நாட்டியம். 30 ஆண்டுகளாக பரத நாட்டியம் ஆடி வருகிறேன். முறைப்படி கர்னாடக சங்கீதமும் பயின்றிருக்கிறேன். 'ஆர்ஷகலாபாரதி' நடனப்பள்ளி வாயிலாக பரதம் கற்பிக்கிறேன். கீதை என்பது, ஒரு குறிப்பிட்ட மதம், இனத்துக்கானது அல்ல. ஒட்டுமொத்த மானுட சமூகத்துக்கானது. உபநிஷதங்களின் சாரம். இதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, பரதம் சிறந்த வழி எனத் தோன்றியது.தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் தத்துவ விளக்கங்களின் அடிப்படையில், கீதையின் 18 அத்தியாயங்களையும், ஒவ்வொரு அத்தியாயத்தின் சாரத்தையும் விரிவாக, இசையோடு கூடிய நாட்டியமாக வடிவமைத்திருக்கிறேன்.முதல் அத்தியாயமான 'அர்ஜுன விஷாத யோகா'வை ஒரு மணி நேரம் விரிவான தத்துவங்களோடு நாட்டியத்தில் விளக்கி, வீடியோவாக பதிவு செய்துள்ளேன். மற்ற 17 அத்தியாயங்களையும் நாட்டியமாக வடிவைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இளம் தலைமுறைக்கு, நம் பாரதத்தின் பெருமையை, கலாசாரத்தின் ஆழத்தை விளக்க வேண்டும் எனும் ஆசையில் இதைச் செய்து வருகிறேன். பள்ளி, கல்லூரிகளிலும் கீதா நாட்டியத்தை நிகழ்த்தி வருகிறேன்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி