உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இஸ்கான் சார்பில் பிப்., 3ல் கீதாதான் 2024 கருத்தரங்கு

இஸ்கான் சார்பில் பிப்., 3ல் கீதாதான் 2024 கருத்தரங்கு

கோவை;பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, இஸ்கான் அமைப்பு, 'கீதாதான் 2024' என்ற கருத்தரங்கை நடத்துகிறது.பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு, வரும் 3ம் தேதியன்று வரதராஜபுரத்திலுள்ள சாய்விவாஹா மஹாலில் நடத்தப்படுகிறது.இதற்கு, இஸ்கான் அமைப்பின் மூத்த தலைவர் பக்திவினோதசுவாமி மஹராஜ் தலைமை வகிக்கிறார். இக்கருத்தரங்கு தொடர்பான பயிற்சி வகுப்புகள், தேர்வுகள் பள்ளிகள் தோறும் நடத்தப்பட்டன.விழிப்புணர்வை துாண்டும் வகையில், போஸ்டர் வரையும் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் பங்கேற்று, திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வரும் 3ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை