மேலும் செய்திகள்
திருப்பூரில் ரூ.10 கோடி மோசடி:குடும்பமே கைது
10-Sep-2024
கோவை : முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி, ரூ. 22 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்தவர் சரவணன், 34. இவரை தொடர்பு கொண்ட கோவையை சேர்ந்த நிதி நிறுவனத்தினர் (டெய்லி வியூ பினான்ஸ் சர்வீஸ் லிமிடெட்), முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக தெரிவித்தனர். இதை நம்பிய சரவணன், 2021ம் ஆண்டு ஜூன் முதல் அக்., வரை ரூ. 22 லட்சத்து 36 ஆயிரத்து 491 பணத்தை, நிதி நிறுவனத்தினர் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். மூன்று ஆண்டுகள் ஆகியும், வட்டி மற்றும் முதலீடு செய்த அசல் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்ததால், சரவணன் நேற்று முன்தினம் கோவை வந்து, ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விவேக், 35 மற்றும் விஷ்ணு லிங்கம், 38 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
10-Sep-2024