மேலும் செய்திகள்
இரண்டாக பிரியும் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்
11-Dec-2025
அன்னூர்: கோவை மாவட்டத்தில், புதிதாக ஆறு ஊராட்சிகளை உருவாக்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது : கோவை மாவட்டத்தில், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்படுகிறது. மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், செந்தாம்பாளையம், பொன்னே கவுண்டன்புதூர் ஆகிய கிராமங்கள் அமைகின்றன. புதிதாக உருவாகும் ஓரைக்கால் பாளையம் ஊராட்சியில், ஓரைக்கால் பாளையம், குரும்பபாளையம், செம்மாணி செட்டிபாளையம் ஆகிய கிராமங்கள் அமைகின்றன. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், பிளிச்சி ஊராட்சி, பிளிச்சி, ஒன்னிபாளையம் என இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்படுகிறது. பன்னிமடை ஊராட்சி, பன்னிமடை, கணுவாய் என இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்படுகிறது. சூலூர் ஒன்றியத்தில், முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி, முத்து கவுண்டன்புதூர் மற்றும் முதலிபாளையம் என இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்படுகிறது. மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில், மயிலேறி பாளையம் ஊராட்சி, மயிலேறிபாளையம் மற்றும் ஏலூர் என இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்படுகிறது. ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் திவான் சாபுதூர் ஊராட்சி, திவான்சா புதூர் மற்றும் கணபதி பாளையம் என இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கோவை உள்பட எட்டு மாவட்டங்களில், 17 ஊராட்சிகள், 37 கிராம் ஊராட்சிகளாக தற்போது பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகள் பிரிக்கப்படுவதால், ஊராட்சிகளில் பணிகள் வேகமடையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
11-Dec-2025