உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கேபிள் டிவி எச்.டி., சேவை விழிப்புணர்வு வாகனம் அறிமுகம்

அரசு கேபிள் டிவி எச்.டி., சேவை விழிப்புணர்வு வாகனம் அறிமுகம்

கோவை : அரசு கேபிள் டிவியின் எச்.டி., சேவை குறித்த, விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை, மாநகர போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மூலம், புதிதாக 50 லட்சம் எச்.டி. உயர் வரையறை 'டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்கள்' குறைந்த கட்டணத்தில், வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரண்டு லட்சம் செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர் பாலாஜி தலைமையில், விழிப்புணர்வு வாகனம் உள்ளது.இந்த விழிப்புணர்வு வாகனத்தை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேற்று அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில், கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர் பாலாஜி, தனி வட்டாட் சியர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை