அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் பொறுப்பேற்பு
கோவை; கோவை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் பொறுப்பில் டாக்டர் யசோதை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கோவை அரசு மருத்துவமனை சித்த மருத்துவமனை பிரிவின் கீழ், பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், தொற்றா நோய் மருத்துவம், உள்ளிட்ட அனைத்துக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை சித்த அலுவலராக பணியாற்றிய சண்முகவடிவேல் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளார். சூலுார் அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவ அலுவலராக பணியாற்றிய டாக்டர் யசோதை பதவி உயர்வு பெற்று, கோவை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.