உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு அலுவலக சுவர்கள் அலங்கோலம்; போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்படுமா?

 அரசு அலுவலக சுவர்கள் அலங்கோலம்; போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்படுமா?

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலக சுவற்றில், விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான பஸ் ஸ்டாண்ட், கிராமப்புற நிழற்கூரைகள், மேம்பால தூண்கள் உள்ளிட்ட இடங்களில், கட்சி மற்றும் அமைப்புகள் சார்ந்த விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என எழுதப்பட்டிருந்தாலும், அதை மதிக்காமல் போஸ்டர் ஒட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது, கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு அலுவலக சுற்றுச்சுவரில், போஸ்டர்கள் ஒட்ட துவங்கியுள்ளனர். இதில், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் நுழைவுவாயில் கேட் அருகே உள்ள சுவரில், ஆர்ப்பாட்டம் சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதே போன்று, கிணத்துக்கடவு வி.ஏ.ஓ., அலுவலக சுவற்றில் தனியார் விளம்பர போஸ்டர்கள் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன. மேலும், நெடுஞ்சாலைத்துறை அலுவலக சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அரைகுறையாக கிழிக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு சுவர்களும் அலங்கோல மாக காட்சியளிக்கிறது.இதை சரி செய்ய அரசு அலுவலக சுவர்களில், மக்கள் பயன்பெறும் வகையில் முக்கிய அறிவிப்புகள் சார்ந்த தகவல்களை இடம்பெற செய்ய வேண்டும் அல்லது போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்க வேண்டும். எச்சரிக்கை அறிவிப்பை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ