உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு அதிகாரிகளால் எதையும் சாதிக்க முடியும்

அரசு அதிகாரிகளால் எதையும் சாதிக்க முடியும்

கோவை; ''அரசு அதிகாரிகளால் எதையும் சாதிக்க முடியும்,'' என, தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர்கள் தேர்வாணைய(டி.என்.பி.எஸ்.சி.,) உறுப்பினர் பிரேம்குமார் பேசினார். கைரளி கல்ச்சுரல் அசோசியேஷன் சார்பில், கே.சி.ஏ., ஓணம் விழா மற்றும் 26 ம் ஆண்டு விழா கணபதி கே.கே.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பிரேம்குமார் பேசுகையில்,''ஓணம் பண்டிகை அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இன்றைய இளைய தலைமுறைக்கு நமது கலாசாரத்தை இதுபோன்ற விழாக்கள் கற்றுத்தருகின்றன. அரசு அலுவலர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். இன்றைய இளைய தலைமுறையினர் அரசு தேர்வுகளை எழுதி, வெற்றி பெற வேண்டும். அதற்கான வழிமுறைகளை பெற்றோர் கற்றுத்தர வேண்டும்,'' என்றார். விழாவின் தலைவர் உன்னிகிருஷ்ணன் வரவேற்றார். முன்னதாக காலையில் நடந்த ஓணம் விழாவை, பாரத் கலா சங்கமம் தலைவர் நந்தகுமார் துவக்கி வைத்தார். ஆர்ய வைத்திய பார்மஸி நிர்வாக இயக்குனர் தேவிதாஸ் வாரியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாலையில் நடந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் மகாதேவன் கவுரவிக்கப்பட்டார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி