உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீன்குஞ்சு கொள்முதல் அரசு வழங்குது மானியம்

மீன்குஞ்சு கொள்முதல் அரசு வழங்குது மானியம்

கோவை : பதிவு பெற்ற மீன்வளர்ப்போருக்கு மீன்குஞ்சுகளை கொள்முதல் செய்ய, அரசு 5,000 ரூபாய் மானியம் வழங்குகிறது.கலெக்டர் அறிக்கை:கோவை மாவட்டத்தில் மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்பு தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு, உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக, 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு, 5,000 ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது.கோவை மாவட்டத்திலுள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகளை கொள்முதல் செய்து மானியம் பெறலாம்.இத்திட்டத்திற்கான, விண்ணப்பங்கங்களை,டவுன்ஹால் சி.எஸ்.ஐ., பள்ளிஅருகில் இயங்கி வரும் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தை, 96555 06422 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை