கபடி போட்டியில் கலக்கும் அரசு பள்ளி வீராங்கனைகள்
கோவை; மாவட்ட அளவிலான 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்துவருகிறது. பள்ளி மாணவியருக்கான கபடி போட்டிகள், ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 20 அணிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் காலிறுதியில், சூலுார் அரசுப் பள்ளி 'ஏ' அணி, 42-6 என்ற புள்ளிகளில் கலைவாணி பள்ளி அணியையும், இரண்டாம் காலிறுதியில் நல்லாம்பாளையம் அமிர்தா பள்ளி அணி, 45-37 என்ற புள்ளிகளில் பயனீர் பள்ளி அணியையும் வென்றன. மூன்றாம் காலிறுதியில், ஆர்.என்.ஜி.பி., அணி, 35-31 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி.ஜி., கன்யாகுருகுலம் பள்ளி அணியையும், நான்காம் காலிறுதியில் சூலுார் அரசுப் பள்ளி 'பி' அணியை, 52-18 என்ற புள்ளி கணக்கில், வி.ஆர்.டி., பள்ளி அணி வென்றது.