அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு
உடுமலை : திருப்பூர் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், காரத்தொழுவு அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி, உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், பள்ளிகளுக்கான மாணவர்கள் பிரிவில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.மேலும், மாநில அளவிலான போட்டிக்கு, காரத்தொழுவு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், விஜயன், கார்த்திகேயன் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை, தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.