வடக்கு குறுமைய போட்டிகள்; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
பெ.நா.பாளையம்; மாணவர்களுக்கான வடக்கு குறுமைய போட்டியில் ஹேண்ட்பால் போட்டியில், 17 வயது குட்பட்ட பிரிவில் நரசிம்மநாயக்கன்பாளையம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றனர். இதே போல ஹேண்ட்பால் போட்டியில், 14 மற்றும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர்களுக்கான பிரிவுகளில், இரண்டு பிரிவுகளிலும் நரசிம்மநாயக்கன்பாளையம் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவியர் அணி முதல் இடத்தை பெற்றது. தனிநபர் கம்பு சண்டை போட்டியில், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நரசிம்மநாயக்கன்பாளையம் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த விஷ்ணு பிரியன் முதலிடத்தையும், 17 வயதுக்குட்பட்ட தனிநபர் கம்பு சண்டை போட்டியில் சுகாஸ் இரண்டாம் இடத்தையும் பெற்றார். சிலம்பம் போட்டியில் கம்பு சண்டை பிரிவில் நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர் ஐஸ்வர்யா, கவி ஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். இத்தகவலை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் தெரிவித்தார்.