மேலும் செய்திகள்
பள்ளிகள் பராமரிப்பு நிதி செலவிடப்படுகிறதா
23-Oct-2024
பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில் பார்வையாளர்கள் நேரத்தை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளித் தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கல்வித்தரம், பள்ளியின் கட்டமைப்பு, விளையாட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை கருத்தில் கொண்டு, பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முற்படுகின்றனர்.அதில், கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு ஆதாரமாக, அரசு பள்ளிகள் விளங்குகின்றன. இதற்காக, கல்வித்தரத்தை உயர்த்த ஆங்கில வழிக்கல்வி, ஆசிரியர்களுக்கு பயிற்சி போன்ற பல்வேறு வழிமுறைகளை அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.இருப்பினும், பல அரசு பள்ளிகளில், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக, புகார் எழுகிறது. அரசுப்பள்ளிகளுக்கு பகல் மற்றும் இரவு பாதுகாவலர் நியமிப்பதன் வாயிலாக பள்ளி வளாகம் பாதுகாக்கப்படுவதோடு, அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை ஏற்படும் என எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், பாதுகாவலர் இல்லாத காரணத்தால், பலரும் முன் அனுமதி பெறாமலேயே பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர். மாணவர்களுக்கு மதிய உணவு எடுத்து வரும் பெற்றோர்கள் இடம் பெறுகின்றனர். நேராக, வகுப்பறைக்குச் சென்று, தங்கள் குழந்தைகளைச் சந்திந்து திரும்புகின்றனர்.இதேபோல, ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடந்தால், முன்பின் தெரியாத பலரும், பள்ளி வளாகத்திற்குள் வந்து விடுகின்றனர். இதனை தடுக்க முடிவதில்லை. எனவே, அரசு பள்ளிகளில், பாதுகாவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.மேலும், வெளியாட்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சந்திக்கும் வகையில், பார்வையாளர்கள் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
23-Oct-2024