மேலும் செய்திகள்
'சஹோதயா' தடகளப்போட்டி; ஆலயா அகாடமி அபாரம்
18-Feb-2025
கோவை; ஐ.பி.ஏ.ஏ., விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி., மற்றும் பெண்கள் பிரிவில் அரசு மகளிர் பாலிடெக்னிக் அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான 'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேசன்'(ஐ.பி.ஏ.ஏ.,) விளையாட்டு போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் இரு நாட்கள் நடந்தது. இதில், 5,000 மீ., ஓட்டத்தில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி, பி.எஸ்.ஜி., கல்லுாரி, கோத்தகிரி என்.பி.ஏ., கல்லுாரி, மேட்டுப்பாளையம் என்.எல்.பி.டி.சி., கல்லுாரி ஆகியன முதல் நான்கு இடங்களை பிடித்தன.தவிர, 100 மீ., ஓட்டத்தில் சஞ்சய், பாலகண்ணன், மயூரிநாதன், நாகலோகேஸ்வரன் ஆகியோரும், 200 மீ., ஓட்டத்தில் பாலகண்ணன், சஞ்சய், மயூரிநாதன், ஹரிபிரசாத் ஆகியோரும், 400 மீ., ஓட்டத்தில், லக்ஷித், ரஞ்சித், ஹரிஷ்ஜெய், மோனேஸ் ஆகியோரும், 800 மீ., ஓட்டத்தில் ஸ்ரீகுரு, விக்னேஷ்வரன், பார்த்திவ், அஜய் ஆகியோரும் முதல் நான்கு இடங்களை பிடித்தனர்.மேலும், 1,500 மீ., ஓட்டத்தில் ஸ்ரீகுரு, விக்னேஷ்வரன், குகனேஷ்வரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியும், பெண்கள் பிரிவில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியும் வென்றன.வெற்றி பெற்றவர்களுக்கு கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் தேன்மொழி, உடற்கல்வி இயக்குனர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கினர்.
18-Feb-2025