உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் கல்லுாரிக்கு கவர்னர் ரவி கவுரவம்

இந்துஸ்தான் கல்லுாரிக்கு கவர்னர் ரவி கவுரவம்

கோவை: என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லுாரிகளை கவுரவிக்கும் நிகழ்வு, சென்னை ராஜ்பவனில் நடந்தது.இதில், கோவை முன்னணி கல்விநிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி நிர்வாகிகளை, கவர்னர் ரவி கவுரவித்தார். இவ்விருதை, கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி பெற்றுக்கொண்டார். செயலாளர் பிரியா, சி.இ.ஓ., கருணாகரன், கல்லுாரி முதல்வர் ஜெயா ஆகியோர் உடனிருந்தனர். கல்வியில் சிறந்து விளங்குதல், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, ஆசிரியர்களின் தரம், மாணவர்களின் திறன், உள் கட்டமைப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்து விளங்கியதால், இக்கல்லுாரி தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை