உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அமைச்சர்களை சந்திக்க பட்டதாரி ஆசிரியர் கழகம் திட்டம்

மத்திய அமைச்சர்களை சந்திக்க பட்டதாரி ஆசிரியர் கழகம் திட்டம்

கோவை; 'டெட்' தேர்வு தொடர்பான சமீபத்திய தீர்ப்பு தொடர்பாக, மத்திய அமைச்சர்களை சந்திக்க, பட்டதாரி ஆசிரியர் கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை-உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் அருளானந்தம் கூறுகையில், “கோர்ட் உத்தரவு தொடர்பாக, ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசு, சட்ட வல்லுநர் குழுவை அமைத்து உடனடியாக தலையிட்டு, மறு சீராய்வு மனு அல்லது மேல்முறையீடு தாக்கல் செய்ய வேண்டும். கல்வித்துறையில் பதவி உயர்வு வழங்கப்படாததால், கற்பித்தல் பணி தேக்கம் அடைந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகளை உடனடியாக வழங்கி, தீர்ப்பிலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என் றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை